‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கத்தில் உருவாகும் ‘பிக்காசோ’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்தின் தந்தையாக நடித்துள்ளார். மேலும், ஷிவானி நாகராம், யோகலட்சுமி, கானா வினோத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டிராமா கம்பெனி தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதல் பாடலான ‘ஹகுனா மாடாடா’ தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் ஆதவன் பாடல் வரிகளை எழுதியுள்ள நிலையில், இதன் மூலம் அபிஷன் ஜீவிந்த் முதன்முறையாகப் பின்னணிப் பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் ‘பிக்காசோ’ திரைப்படம், 2027-ம் ஆண்டு ஜனவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
