Advertisement

ரசிகர்களை கவனத்தை ஈர்க்கும் பிரபுதேவா – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் ‘மூன்வாக்’ டிரெய்லர்!

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘மூன்வாக்’. அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ள இப்படம் நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ளது.

இதில் பிரபுதேவா, ஏ.ஆர்.ரகுமான், யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருப்பதுடன், இப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார். பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

வரும் டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ள ‘மூன்வாக்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வித்தியாசமான நகைச்சுவைக் காட்சிகளுடன் வெளியாகியுள்ள டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா – ஏ.ஆர்.ரகுமான் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply