Advertisement

“தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை, ரிஸ்க் எடுப்பது முக்கியம்” – ருக்மிணி வசந்த்

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ருக்மிணி வசந்த், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தனது வாழ்க்கை குறித்த பார்வையைப் பகிர்ந்துகொண்டார். அப்போது, வாழ்க்கையில் தனக்குப் பிடித்தமான விஷயம் எது எனக் கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், “வாழ்க்கையில் எனக்கு ரிஸ்க் எடுப்பதுதான் மிகவும் பிடிக்கும். எந்தவொரு விஷயத்திலும் சவால்களைச் சந்திப்பதில் ஒரு தனி திரில் இருக்கிறது.

அதேபோல் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் மகிழ்ச்சி புரியும். முடியாது என்று ஒதுங்குவதைவிட, ரிஸ்க் எடுத்து தோல்வியடைவது மேல். முயற்சி இல்லாமல் வெற்றியைப் பெற முடியாது. எனவே வாழ்க்கையில் ரிஸ்க் எடுங்கள்; நல்ல முடிவுகளை காலம் தரும்” என்று தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply