நடிகர் ஜெய், பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை, ‘சக்ரா’ படத்தை இயக்கிய எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். தற்காலிகமாக ‘ஏஜிஎஸ் 29’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் யோகி பாபு, ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக், அருள் தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
ஆக்ஷன், திரில்லர் மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. இதில் பிரியங்கா மோகன் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ‘கே.ஜி.எப்.’, ‘சலார்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஊட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.
தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
