‘சூப்பர் பி மேன்’ படத்தை இயக்கும் இயக்குனர் டி. ஜீவிதா கிஷோர்!

இது தற்போது சூப்பர் ஹீரோ திரைப்படங்களின் பருவமாக மாறியுள்ளதுபோல் தோன்றுகிறது. ஹாலிவுட் திரைப்படங்களைப் போலவே, சூப்பர் ஹீரோ கதைகளை மையமாகக் கொண்ட படங்கள் அதிக அளவில் உருவாகி வருகின்றன. ‘மின்னல் முரளி’, ‘லோகா’, ‘ஹீரோ’, ‘கருப்பு’ போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து அதே பாணியில் உருவாகி வரும் புதிய சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘சூப்பர் பி மேன்’ ஆகும். இந்த திரைப்படத்தை ஆம்பிஷியஸ் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

டி. ஜீவிதா கிஷோர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில், ‘3.33’ திரைப்படத்தை இயக்கிய நம்பிக்கை சந்துரு இந்த படத்தில் கதாநாயகனாக, அதாவது சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார். சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவு மேற்கொண்டு வருகிறார். ஹர்ஷவர்தன் இசையமைத்து வருகிறார். இதர நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திரைப்படம் குறித்து டி. ஜீவிதா கிஷோர் கூறியதாவது: “பேண்டஸி மற்றும் உயிர் பிழைப்பை மையமாகக் கொண்ட சுவாரஸ்யமான கதையாக ‘சூப்பர் பி மேன்’ உருவாகியுள்ளது. இது நிஜத்தன்மை கொண்ட ஒரு சூப்பர் ஹீரோ கதையாகவும், அதே நேரத்தில் காட்சிப்பூர்வமாக ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய நடிகர்கள் மற்றும் வலுவான தொழில்நுட்பக் குழுவுடன் இந்த படத்தை உருவாக்கி வருகிறோம். புதிய வகை, திறமையான கலைஞர்கள் மற்றும் வலுவான தொழில்நுட்ப அணியுடன் ‘சூப்பர் பி மேன்’ தமிழ் ரசிகர்களுக்கு புதிய தலைமுறை சூப்பர் ஹீரோ அனுபவத்தை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading