புதையலைத் தேடி செல்லும் வேட்டைக்காரனாக நடிக்கும் ‘விருஷகர்மா’ படத்தில் நடிக்கும் நாக சைதன்யா!

தெலுங்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு சம்யுக்தா நடித்த ‘விருபாக்ஷா’ திரைப்படம் வெளியானது. இந்த ஹாரர் திரில்லர் வகை படத்தை கார்த்திக் தண்டு வர்மா இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து, தற்போது அவர் நாக சைதன்யா நடித்த ‘விருஷகர்மா’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படமும் ஒரு அதிசயத் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து நாக சைதன்யா சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, இந்த திரைப்படத்தில் நான் ‘அர்ஜுன்’ என்ற கதாபாத்திரத்தில், புதையலைத் தேடி செல்லும் ஒரு வேட்டைக்காரனாக நடித்துள்ளேன். இதுபோன்ற கதைக்களம் ஹாலிவுட் திரைப்படங்களில் பலமுறை பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இந்திய சினிமாவில் இதுபோன்ற முயற்சிகள் மிகக் குறைவாகவே உள்ளன. எனவே, இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு புதிய மற்றும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் நாக சைதன்யா.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading