பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘பரிமளா & கோ’… வெளியான டைட்டில் டீஸர்!

‘பசங்க’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜ், ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ போன்ற பல வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து வழங்கியுள்ளார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படமும் ரூ.100 கோடி வசூல் செய்து பெரிய சாதனையை நிகழ்த்தியது.

தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர். ஜியார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் தலைப்பு அறிமுகக் காணொளி நகைச்சுவை மிக்க விதத்தில் வெளியாகி, திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

இந்நிலையில், லைகா புரொடக்ஷன்ஸ், தமிழ்க்குமரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பசங்க புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு ‘பரிமளா & கோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading