விஜய் சாருக்கு மிகப்பெரிய ஹிட் பாடல்கள் கொடுக்க ஆசைப்பட்டேன் – இசையமைப்பாளர் சாய் அபயங்கர்!

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியான ‘பல்டி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரைத்துறையில் அறிமுகமானவர் சாய் அபயங்கர். அதன் பின்னர் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ திரைப்படத்திற்கு இசையமைத்து கவனம் பெற்றார். அந்த திரைப்படமும் அதிலுள்ள பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி கண்டன. தற்போது சூர்யா நடித்த ‘கருப்பு’, அல்லு அர்ஜுன் நடித்த ‘ராக்கா’ மற்றும் ‘பென்ஸ்’, ‘மார்ஷல்’, ‘தனுஷ் 55’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருவதால் மிகவும் பிஸியாக உள்ளார்.

இந்த சூழலில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் விஜய் நடித்த திரைப்படத்திற்கு இசையமைக்க முடியாமல் போனது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “நான் விஜயின் ரசிகன் மட்டுமல்ல, அவருடைய தீவிர ரசிகன் என்று சொல்லலாம். அதனால் அவருடைய திரைப்படங்களுக்கு இசையமைத்து, அவருக்காக வலிமையான வெற்றி பாடல்களை வழங்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசையாக இருந்தது.

குறிப்பாக அவர் நடித்த ‘சச்சின்’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால் அவர் தற்போது சினிமாவில் இருந்து விலகியிருப்பதால், அந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார் சாய் அபயங்கர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading