விஜய் எப்படி ஜெயித்தார் தெரியுமா? நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் பளீச் பதில்!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் தெரிவித்துள்ள கருத்து வருமாறு: விஜய் எப்படி ஜெயித்தார்? எதற்காக ஜெயித்தார்? ஒரு சினிமாக்காரரா ஜெயித்தார்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் இனிமேல் இடமே கிடையாது. ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் விஜய் ஜெயித்தார். மக்கள் விரும்பினார்கள், அவரைத் தேர்ந்தெடுத்தார்கள். அவ்வளவுதான் ஆர்கியூமென்ட் க்ளோஸ்டு (Argument Closed). மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இது ஒரு மாற்றத்திற்கான முன்னெடுப்பு. தேங்கிக் கிடந்த தண்ணீரை ஒரு புது வெள்ளம் வந்து அடிக்க வேண்டும், புனருத்தாரணம் செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். அந்தப் புது வெள்ளம் விஜய் தான் என்று அவர்கள் தீர்மானித்தார்கள், அவரைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு சக நடிகராக நான் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading