ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு!

தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அந்தப் படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னடத் திரையுலகின் பிரபல நடிகர் சிவ ராஜ்குமார், ‘மிர்சாபூர்’ மூலம் புகழ்பெற்ற திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகுந்த செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சிறப்பு பாடலுக்காக, சுருதிஹாசன் ராம் சரண் உடன் இணைந்து நடனமாடியுள்ளார்.

இந்நிலையில், ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading