அஜித்குமாரின் ரேஸிங் பயணமான ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு கார் பந்தயங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய அணியை உருவாக்கி பல்வேறு சர்வதேச தொடர்களில் பங்கேற்று வெற்றிகளைப் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துவருகிறார்.

இந்நிலையில், அஜித்குமார் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் உட்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவரது ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்டு ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், அஜித்குமார் அவர்களின் பந்தய வாழ்க்கையை எடுத்துரைக்கும் இந்த ஆவணப்படத்தின் முதல் தோற்றக் காணொளி வெளியாகியுள்ளது. மேலும் ‘கிளாடியேட்டர்ஸ்’ எனப்படும் இந்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பந்தய உலகில் அஜித்குமார் சாதித்த வெற்றிகளை ரசிகர்கள் பெரிய திரையில் காணும் தருணம் விரைவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading