ஒரு மாதத்திற்கு எனக்கான செலவுகள் சுமார் ரூ.5 லட்சம்… நடிகை நிதி அகர்வால் பகிர்ந்த தகவல்!

பாலிவுட் திரையுலகில் இருந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அறிமுகமானவர் நிதி அகர்வால். தனது முதல் தெலுங்கு திரைப்படத்தில் நாக சைதன்யாக்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர், ராம் பொதினேனி நடித்த ‘இஸ்மார்ட் சங்கர்’ திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.

தமிழில், ‘ஈஸ்வரன்’ மற்றும் ‘பூமி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிப்புடன் சேர்த்து தனது கவர்ச்சியான தோற்றத்தாலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார். தற்போது, பான்-இந்தியா அளவில் உருவாகும் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது மாதாந்திர செலவுகள் குறித்து நிதி அகர்வால் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: “மாதந்தோறும் பயணம், தங்குமிடம், உணவு கட்டுப்பாடு, ஜிம், பயிற்சியாளர், அழகு பராமரிப்பு உள்ளிட்ட செலவுகள் மட்டும் சுமார் ரூ.5 லட்சம் வரை ஆகின்றன. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது மேக்கப், உடை, முடி அலங்காரம், புகைப்படம் போன்றவற்றிற்காக கூடுதலாக சுமார் ரூ.1 லட்சம் செலவாகிறது. சில நேரங்களில் இந்த செலவுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள்; ஆனால் பல நேரங்களில் அதை நான் தனியாகவே மேற்கொள்ள வேண்டியிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading