ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்தின் ‘ராதே ராதே’ பாடல்!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘ஆகாசம்லோ ஒக தாரா’. பவன் சடிநேனி இயக்கும் இப்படத்தில் சாத்விகா வீரவல்லி கதாநாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்குத் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். சமீபத்தில் சாத்விகாவின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வீடியோவைப் படக்குழு வெளியிட்டிருந்தது.

கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமாஸ், லைட் பாக்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. வரும் நவம்பர் 20-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இதற்கிடையே, துல்கர் சல்மானின் புதிய தோற்றம் மற்றும் படத்தின் முக்கிய காட்சிகள் இடம்பெற்ற டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘ராதே ராதே’ தற்போது வெளியாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் லிப்சிகா பாஷ்யம் இணைந்து பாடியுள்ள இப்பாடலுக்கு பாலாஜி வேணுகோபால் வரிகள் எழுதியுள்ளார். ஜி.வி. பிரகாஷின் இசையில் வெளியாகியுள்ள இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

Add a Comment

Leave a Reply