“எனக்கு ரசிகர் மன்றம் கிடையாது” – போலி சமூக வலைதளப் பக்கங்கள் குறித்து ஜேசன் சஞ்சய் அறிக்கை!

சந்தீப் கிஷன் நடிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. வணிக ரீதியான கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ஜேசன் சஞ்சய் பங்கேற்றபோது, அவரை இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் திரையில் பார்க்க விரும்புவதாக ரசிகர்கள் பலர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தனது பெயரில் செயல்பட்டு வரும் சில சமூக வலைதளப் பக்கங்கள் குறித்து ஜேசன் சஞ்சய் விளக்கம் அளித்துள்ளார். தனக்கு ரசிகர் மன்றம் எதுவும் இல்லை என்றும், தனது பெயரில் எந்தவொரு ரசிகர் மன்றத்தையும் தொடங்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது பெயரில் இயங்கும் சில பக்கங்கள் போலியானவை என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தனது அதிகாரப்பூர்வமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சமூக வலைதளக் கணக்குகளைத் தெளிவுபடுத்துவதற்காக இந்த அறிக்கையை வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அறிக்கையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கணக்குகள் மட்டுமே தன்னால் நிர்வகிக்கப்படும் அதிகாரப்பூர்வ கணக்குகள் என்றும் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply