நீண்ட இடைவெளிக்கு பிறகு என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் கே.எஸ். அதியமான்!

தமிழில் ‘தொட்டான் சிணுங்கி’, ‘தூண்டில்’ போன்ற திரைப்படங்களை இயக்கியவர் கே.எஸ். அதியமான். அதன் பின்னர் அவர் ஹிந்தி திரைப்படங்களை இயக்கி வந்தார். கடந்த சில ஆண்டுகளாக இயக்குநராக எந்த புதிய திரைப்படங்களையும் இயக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக திரும்பி, தமிழில் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ‘நினைவுகள்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ரேவதி, விதார்த் மற்றும் லிஜோ மொல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வி ஹவுஸ் நிறுவனம் மூலம் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், இந்த திரைப்படத்தை சில தேர்ந்தெடுக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்காக சுரேஷ் காமாட்சி திரையிட்டுள்ளார். இந்தத் திரையிடலை பார்த்த விநியோகஸ்தர்கள் படம் குறித்து மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஒரு சிறந்த ‘பீல் குட்’ திரைப்படமாக இது அமைந்துள்ளது என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading