தமிழ் சினிமாவில் ‘மார்க்கண்டேயன்’ என அழைக்கப்படும் நடிகர் சிவகுமார், 84 வயதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு வருவதால் ரசிகர்கள் அவரை அப்படியே அழைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சார்பில் நடத்தப்பட்ட பத்மஸ்ரீ அவ்வை சண்முகம் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவக்குமார் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார்.
அவர் பேசும்போது, “என்னுடைய 100வது படத்தின் போது, ‘சாகும் வரை இளமையாக இருப்பான் சிவக்குமார்’ என்று எம்.ஜி.ஆர் கூறியிருந்தார். அவர் சொன்னதைப் போலவே, இன்றும் நான் இளமையாகவே இருக்கிறேன். எனக்கு தற்போது 85 வயது ஆகிறது. ஆனால் என்னைப் பார்த்தால் அப்படித் தோன்றுகிறதா?” என்று நகைச்சுவையுடன் பகிர்ந்தார்.
—
