அடுத்தடுத்து ரிலீஸ்க்கு தயாரான மமிதா பைஜூவின் 4 திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் இப்போது உள்ள இளம் நடிகைகளில் முன்னணியில் திகழ்பவர் மமிதா பைஜு எனலாம். இந்த ஆண்டிலேயே அவருக்கு தொடர்ச்சியாக நான்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அவை அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் அவரது முதல் தமிழ்ப் படம் விஜய் உடன் நடித்த ‘ஜனநாயகன்’ ஆக இருக்க வேண்டும். ஆனால், அந்த படம் தொடர்ந்து தள்ளிப் போகும் நிலையில் உள்ளது. இருப்பினும், அது மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், அவரது முதல் வெளியீடாக ஏப்ரல் 30ஆம் தேதி தனுஷ் ஜோடியாக நடித்துள்ள ‘கர’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் மமிதா பைஜு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவுவதால், இந்த ஆண்டின் வெற்றிக் கணக்கை ‘கர’ திரைப்படத்தின் மூலம் தொடங்குவார் என கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் உடன் நடித்துள்ள ‘இரண்டு வானம்’ திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்தப் படத்திலும் அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நான்காவது படமாக சூர்யா ஜோடியாக நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படமும் வெளியாக உள்ளது. ஒரே ஆண்டில் இவ்வளவு முக்கியமான படங்களில் நடித்துள்ள மமிதா பைஜு, இந்த படங்களின் மூலம் சிறந்த நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading