பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படங்களில் தற்போது முக்கியமாக பேசப்படுவது சர்தார் 2 ஆகும். இந்தப் படத்தில் கார்த்தி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பி.எஸ். மித்ரன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பி.எஸ். மித்ரன் தனுஷ் அவர்களுக்கு ஒரு புதிய கதையை கூறியுள்ளார். இந்த திரைப்படத்தை எந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. படம் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது என முன்பே தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும், இந்த திரைப்படத்தை பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி தனது பன்சாலி புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இந்தக் கதையை முதலில் யஷ் அவர்களிடம் பி.எஸ். மித்ரன் கூறியிருந்தார். ஆனால், அவர் தற்போது ‘டாக்சிக்’ மற்றும் ‘ராமாயணா’ போன்ற படங்களில் கவனம் செலுத்தி வருவதால், இந்த வாய்ப்பு அவரிடம் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
—
