தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாகத் தொடர்ந்து நடித்து வருபவர் பிரக்யா ஜெய்ஸ்வால். ‘ஆச்சாரி’, ‘அகண்டா’, ‘டாக்கு மகாராஜ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தனது நடிப்பின் மூலமும் கவர்ச்சிகரமான தோற்றத்தின் மூலமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரக்யா ஜெய்ஸ்வால், விரைவில் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இவர் ‘டைசன் நாயுடு’ என்ற தெலுங்கு திரைப்படத்திலும், ‘சூர்யா – ஆண்ட் சே ஆரம்ப் தக்’ என்ற இந்திப் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பது குறித்து பிரக்யா ஜெய்ஸ்வாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த வாய்ப்பு உறுதியானால், அவர் தமிழில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே பல தமிழ் திரைப்படங்களின் கதைகளைக் கேட்டிருந்தாலும், அவற்றில் எதையும் அவர் தேர்வு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது அவரிடம் கூறப்பட்டுள்ள புதிய கதை பிடித்திருப்பதால், இப்படத்தில் நடிக்க அவர் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், “பிரக்யா ஜெய்ஸ்வால் பல தமிழ் படங்களின் கதைகளைக் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
