‘வாத்தி’ பட நடிகை சம்யுக்தா மேனன்-க்கு விரைவில் திருமணமா? உலாவும் புது தகவல்!

மலையாளத் திரைப்படங்களின் மூலம் அறிமுகமாகி, இன்று தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்து வருபவர் சம்யுக்தா மேனன். ‘வாத்தி’, ‘விருபாக்சா’ போன்ற தொடர்ச்சியான வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இவர், திரையுலகில் ‘கோல்டன் லெக்’ நடிகை எனவும் அழைக்கப்படுகிறார். இந்நிலையில், அவரைச் சார்ந்த ஒரு சுவாரசியமான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

30 வயதை எட்டியுள்ள சம்யுக்தா மேனன் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு முன்பும் இதுபோன்ற வதந்திகள் பரவியபோது, “எனது முழு கவனமும் தற்போது நடிப்பில் தான் உள்ளது; திருமணத்தைப் பற்றி சிந்திக்க நேரமில்லை” என்று அவர் தெளிவாக தெரிவித்திருந்தார். இருப்பினும், தற்போது அவரது திருமணத்தைச் சுற்றி ரகசியமான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது சம்யுக்தா மேனன், நிகில் உடன் இணைந்து ‘சுயம்பு’ மற்றும் ‘பிளாக் கோல்டு’ போன்ற பிரம்மாண்டமான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் அவர் குறித்து மீண்டும் பரவி வரும் இந்த திருமணச் செய்திகள் குறித்து அவர் எவ்வாறு பதிலளிப்பார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading