யு/ஏ சான்றிதழ் பெற்ற சூர்யாவின் ‘சீன்’!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் காமெடி மற்றும் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘சீன்’ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய மலையாளப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். சூர்யா, ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜாகரம் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

துபாயில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, சென்னை பிராந்திய தணிக்கை வாரியம் இப்படத்திற்கு யு/ஏ 16 சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், படத்தின் மொத்த ஓட்ட நேரம் 2 மணி நேரம் 29 நிமிடங்கள் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தச் சான்றிதழின்படி, 16 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலுடன் படத்தைப் பார்க்கலாம்.

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வெளியீட்டுத் தேதியுடன் வெளியான புதிய போஸ்டரும் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. கையில் விலங்குகள் இருப்பது போன்றும், அவை ‘யு/ஏ’ வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பது போன்றும் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply