திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் திரைப்படங்களில் இருந்து விலகி இருந்த ஸ்ரேயா சரண், தற்போது மீண்டும் முழு ஆர்வத்துடன் சினிமா துறையில் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா உடன் இணைந்து ஆடிய அவரது நடனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, இனி வரும் காலங்களில் மேலும் சில படங்களில் நடிக்கவும் கவர்ச்சி நடனம் ஆடவும் அவர் கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஒருவர், “43 வயதிலும் நீங்கள் இவ்வளவு அழகாக எப்படி இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ஸ்ரேயா சரண், வயதை அடிப்படையாகக் கொண்டு நடிகைகளை மதிப்பிடுவது தவறான அணுகுமுறை என எதிர்ப்பு தெரிவித்தார்.
“இப்படியான கேள்விகளை கேட்பதே சரியல்ல. வயது என்பது எந்த வகையிலும் பிரச்சனை அல்ல. திருமணம் ஆன பிறகு நடிகைகளின் வாழ்க்கை முடிந்துவிடும் என்ற மனநிலை முற்றிலும் தவறு. சினிமாவில் சாதிக்க வயது ஒரு தடையாக இருக்காது; திறமை மட்டுமே முக்கியம். உண்மையான கலைஞர்கள் எந்த வயதிலும் தங்கள் திறமையால் சாதிக்க முடியும்,” என்று அவர் தெளிவாக கூறினார். அவரது இந்த பதில் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தையும் ஆதரவையும் ஏற்படுத்தியுள்ளது.
—
