தனது நீண்டநாள் கொள்கையை மீறி முத்தக்காட்சியில் நடித்தது ஏன்? மனம் திறந்த‌ நடிகை கஜோல்!

90-களில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக, ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் கஜோல். இவர் தமிழில் மின்சார கனவு, வேலையில்லா பட்டதாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 51 வயதான இன்றைய நிலையிலும் தனது அழகையும் கவர்ச்சியையும் இழக்காமல் தொடர்ந்து திரையுலகில் செயற்பட்டு வருகிறார். இதுவரை படங்களில் முத்தக்காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்ற தனிப்பட்ட கொள்கையை கடைப்பிடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஒரு ஓடிடி வெப் தொடரில் தனது நீண்டநாள் கொள்கையை மீறி, சக நடிகரான ஜிசு செங்குப்தா உடன் முத்தக்காட்சியில் நடித்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து விளக்கம் அளித்த கஜோல், “உண்மையாகச் சொன்னால், அந்தக் காட்சி கதைக்குத் தேவையான ஒன்று. அந்தக் கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதற்கான முக்கியமான தருணமாக அது அமைந்தது. அது சாதாரண முத்தக்காட்சி அல்ல. அந்த பெண்ணின் மனநிலையையும் உறுதியையும் காட்டும் முக்கியமான பகுதி. அந்த காட்சி இல்லையெனில் கதையின் தாக்கம் குறைந்து போயிருக்கும். அதனால் பலமுறை சிந்தித்த பிறகு தான் என் கொள்கையை மாற்றிக் கொண்டு அந்தக் காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஒரு நல்ல கதைக்காக எதையும் செய்ய முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இதை பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading