இளையராஜா இசையமைப்பில் உருவாகி ஆஸ்காருக்கு தேர்வான ‘கோந்தல்’ படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீடு!

மகாராஷ்டிராவின் பாரம்பரிய கோந்தல் சடங்கு மற்றும் நாட்டுப்புறக் கலை மரபுகளை அடிப்படையாகக் கொண்டு உருவான மராத்தி திரைப்படம் ‘கோந்தல்’. சந்தோஷ் தவாகர் எழுதி இயக்கிய இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சொஹோனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடந்த 2025-ம் ஆண்டு வெளியான இப்படம், 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான சில்வர் பீக்காக் விருதைப் பெற்றது. பல்வேறு பாராட்டுகளையும் பெற்ற இப்படம், 2027-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நவம்பர் 13-ம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி வெளியான தமிழ் டிரெய்லர் கவனம் ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply