Advertisement

‘வாரணாசி’ படத்திற்காக உடல் எடையை குறைத்த மகேஷ் பாபு?

‘வாரணாசி’ படத்திற்காக நடிகர் மகேஷ் பாபு தனது உடல் எடையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இப்படத்தில் ருத்ரா, ஸ்ரீராமர் என இரு வேடங்களில் நடிக்கும் அவர், முதலில் ருத்ரா கதாபாத்திரத்திற்காக உடல் எடையை அதிகரித்ததாகவும், பின்னர் ஸ்ரீராமர் தொடர்பான புராணக் காட்சிகளுக்காக அதைக் குறைத்ததாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான அவரது புகைப்படம், இந்த உடல் மாற்றம் குறித்து ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மெலிந்த தோற்றத்தில் இருப்பதற்காக அவர் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிறாரா என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.

‘வாரணாசி’ படத்தின் இணைத் தயாரிப்பாளரும், இயக்குநர் ராஜமௌலியின் மகனுமான எஸ்.எஸ். கார்த்திகேயாவின் பிறந்தநாளை முன்னிட்டு மகேஷ் பாபு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதில் முழுமையான தோற்றம் தெரியாவிட்டாலும், அவரது மெலிந்த கைகளும் கால்களும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றன. இதையடுத்து பலரும் தங்களது கவலையைப் பகிர்ந்து, உடல் எடையைக் குறைப்பதில் தீவிரம் காட்டாமல் முறையாக உணவு உட்கொள்ளுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Add a Comment

Leave a Reply