Advertisement

சரத்குமார் நடிக்கும் ‘டாக்ஸி’ – இயக்குநர் மணிரத்னம் பங்கேற்ற அறிமுக விழா!

நடிகர் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கடைசியாக வெளியான ‘பொன்னியின் செல்வன்’, ‘போர் தொழில்’, ‘பரம் பொருள்’ உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், அவர் நடிக்கும் 177-வது திரைப்படத்திற்கு ‘டாக்ஸி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் என்டர்டெயினராக உருவாகும் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

‘வானம் கொட்டட்டும்’ படத்தை இயக்கிய தனா இப்படத்தை இயக்குகிறார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர், தற்போது சரத்குமாருடன் இணைந்துள்ளார். அறிமுக விழாவில் மணிரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். எழுத்தாளர் ஜெயமோகன் கதையை எழுத, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ராதிகாவின் ரேடான் மீடியா வொர்க்ஸ் நிறுவனமும் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply