பிரபுதேவா மற்றும் விஷ்ணு மஞ்சு இணைந்து நடிக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால், அதன்பிறகு இப்படம் குறித்த எந்தவொரு முக்கிய அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இப்படத்தின் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் டோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
விஷ்ணு மஞ்சுவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. நகைச்சுவை கலந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகும் இதில், விஷ்ணு மஞ்சுவின் நடிப்பும் பிரபுதேவாவின் கலகலப்பான பாணியும் இணைவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
