மராத்தி மொழியில் நடிக்கும் அபிஷேக் பச்சனின் ‘ராஜா சிவாஜி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் சல்மான்கான்!

பாலிவுட்டில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ரித்தேஷ் தேஷ்முக், தற்போது வீர சிவாஜியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ராஜா சிவாஜி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். நடிகை ஜெனிலியாவின் கணவரான அவர், இந்த வரலாற்றுப் படத்தின் மூலம் இயக்குநராக புதிய முயற்சியை எடுத்துள்ளார்.

மராத்தி மொழியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், நடிகர் அபிஷேக் பச்சன் முதன்முறையாக மராத்தி திரையுலகில் அறிமுகமாகிறார். அவர் இதில் சாம்ராஜ் சாஹாஜி போஸ்லே என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவாஜி மகாராஜா வேடத்தில் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ளார். கதாநாயகிகளாக வித்யாபாலன் மற்றும் ஜெனிலியா இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தில் மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றமாக நடிகர் சல்மான் கான் நடித்துள்ளதாக ரித்தேஷ் தேஷ்முக் தெரிவித்துள்ளார். மராத்தியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் ஆறாவது சீசனை தொகுத்து வழங்கி வரும் அவர், அந்த நிகழ்ச்சியின் சமீபத்திய பகுதியில் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading