பாலிவுட் படத்தை தயாரிக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்?

ஏ.ஆர். முருகதாஸ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ‘தீனா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராசி’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும், வணிக ரீதியாகவும் வெற்றி பெறும் படங்களையும் வழங்கி வரும் அவர், தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார்.

தமிழ் சினிமாவைத் தாண்டி பாலிவுட் திரையுலகிலும் தனது திறமையை நிரூபித்துள்ள ஏ.ஆர். முருகதாஸ், தற்போது தயாரிப்பாளராகவும் புதிய முயற்சியில் ஈடுபடுகிறார். தன்னுடன் இணை இயக்குநராக பணியாற்றிய பாலாஜி கணேஷ் இயக்கும் புதிய இந்திப் படத்தை அவர் தயாரிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் சன்னி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரிதேஷ் சித்வகனி மற்றும் பர்ஹான் அக்தர் ஆகியோருடன் இணைந்து இந்த படத்தைப் தயாரிக்கிறார். இந்தத் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஏ.ஆர். முருகதாஸ், ஆமிர் கான் நடித்த ‘கஜினி’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ‘ஹாலிடே’, ‘அகிரா’, ‘சிக்கந்தர்’ போன்ற பல திரைப்படங்களையும் இயக்கி அங்கு தனது முத்திரையை பதித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading