‘பகவான்’ புராண வரலாற்றை பின்னணியாக கொண்ட திரைப்படம் – இயக்குநர் சு. காளிங்கன்!

அம்மன்யா மூவிஸ் தயாரிப்பில் சி.வி. மஞ்சுநாதா தயாரித்து, இயக்குநர் சு. காளிங்கன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பகவான்’. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இந்தப் படத்தில் ஆரி அர்ஜூனன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா நடித்துள்ளார். மேலும் ஜேம்ஸ் பார்ரெட், சந்தோஷ் பிரதாப், ஆடுகளம் நரேன், ஜெகன், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு முருகன் சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகேந்திரன் கணேசன் எடிட்டிங் பொறுப்பை ஏற்றுள்ளார். சம்பத் ஜி எழுதிய பாடல்களுக்கு ப்ரசன் பாலா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவராஜ் அமைத்துள்ளார். நடன அமைப்பை கலா மாஸ்டர் கவனித்துள்ளார். கலை இயக்கத்தை பாலையா மேற்கொண்டுள்ளார். சண்டைக் காட்சிகளை ஹரி தினேஷ் வடிவமைத்துள்ளார். ஆடை வடிவமைப்பை வினையா தேவ் செய்துள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை புவன் செல்வராஜ் மேற்கொண்டுள்ளார் மற்றும் நிர்வாக தயாரிப்பை மூவேந்தர் கவனித்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் சு. காளிங்கன் கூறுகையில், “இந்த பிரபஞ்சத்தில் மனிதர்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்கள் உள்ளன. அதில் எண்ணற்ற ரகசியங்களும் அடங்கியுள்ளன. நாம் அனைவரும் பகவானை வணங்குகிறோம். இந்த உலகை இயக்குபவர் பகவான் என்றால், அவர் யார்? அவர் ஒரு உருவமா அல்லது அதற்கு மேல் ஏதாவது சக்தியா? அப்படியானால் ‘இல்லுமினாட்டி’ என்னும் கருத்து என்ன? இவ்வாறான கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் கதையே இந்தப் படம். நாம் அறியாத புராண வரலாற்றை பின்னணியாக கொண்டு மிதாலஜிக்கல் திரில்லர் வகையில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading