‘ஜமா’ திரைப்படத்தை இயக்கி, அதில் நடித்த பாரி இளவழகன் தற்போது ‘அன்பே டயானா’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி, அதில் தானும் நடித்துள்ளார். இந்தப் படத்தை ‘டூரிஸ்ட் பேமிலி’ மற்றும் ‘குட் நைட்’ போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கனவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திரைப்படத்தில் நாயகியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ரோஜா செல்வமணி, சேட்டன், பரிதாபங்கள் கோபி, செல் முருகன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ‘அன்பே டயானா’ படத்தைப் பற்றிய தனது அனுபவத்தை பகிர்ந்த பாரி இளவழகன், இந்தப் படத்தில் மிகவும் வலிமையான தெலுங்கு அம்மா கதாபாத்திரம் கதையின் மையமாக இருப்பதை உணர்ந்ததும், அந்த வேடத்திற்கு பொருத்தமானவராக ரோஜா செல்வமணி அவர்களே நினைவுக்கு வந்ததாக கூறினார். அவர் தெலுங்கு பின்னணியையும் கொண்டவர் என்பதுடன், வலிமையான பெண் கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் கொண்டவர் என்பதால் அவரை அணுகியதாக தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்ததால் அவரிடம் இந்தக் கதையை சொல்லலாமா என்ற தயக்கம் இருந்ததாகவும், ஆனால் அவரை நேரில் சந்தித்து கதையை விளக்கியபோது, “என்னையே நான் பார்க்கிற மாதிரி இருக்கிறது” என்று கூறி உடனே இந்தப் படத்தில் இணைந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.
—
