புராணக் கதைக்களத்தில் சந்தீப் கிஷனின் ‘கரிகாலா’… படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் புதிய புராணத் திரைப்படமாக உருவாகிறது ‘கரிகாலா’. உகந்தர் முனி இயக்கும் இப்படத்தை ஷைனிங் பிக்சர்ஸ் சார்பில் மஹிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு இணைந்து தயாரிக்கின்றனர். பிரம்மாண்டமான காட்சிகளுடன் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தில் கேத்ரின் தெரசா, சாக்ஷி மடோல்கர், காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. தொடக்க விழாவில் திரையுலகினர் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் ராஜசேகரின் தாயார் சத்யவதி மற்றும் மஹிதர் ரெட்டியின் தாயார் பத்மா ரெட்டி ஆகியோர் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய சந்தீப் கிஷன், அண்மைக் காலங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், சினிமா மீதான தனது ஆர்வமே ‘கரிகாலா’, ‘பவர் பெட்’ ஆகிய படங்களைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்று தெரிவித்தார்.தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் ‘கரிகாலா’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஸ்ரீசரண் பகாலா இசையமைக்கிறார். புராணப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் அடுத்தகட்ட அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading