சந்தானத்தின் ‘அதிசய பிறவி’… டைம் லூப் திரில்லர் திரைப்படம்!

சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள அவரது 20-வது திரைப்படத்தின் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘அதிசய பிறவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், டைம் லூப் அம்சங்களுடன் கூடிய ஃபேண்டஸி திரில்லராக உருவாகி வருகிறது. தலைப்பை வெளியிடும் போஸ்டரையும் படக்குழு பகிர்ந்துள்ளது.

K7 ஸ்டூடியோஸ் சார்பில் விஜய் கே. செல்லையா, வீனஸ் இன்போடெயின்மென்ட் சார்பில் கே.ஜே. கணேஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். சுதாமன் கிருஷ்ணா எழுதி இயக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கோபிகா ரமேஷ், ஜென்சன் திவாகர், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நேரச் சுழற்சியை மையமாகக் கொண்ட கதைக்களத்துடன் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தலைப்பும் வெளியாகியுள்ளதால், படத்தின் கதை மற்றும் வெளியீடு தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading