மோகன்லால் நடித்துள்ள அவரது 366வது திரைப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ‘தொடரும்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இயக்குநரான தருண் மூர்த்தி உடன் மீண்டும் இணைந்துள்ளார். இந்த புதிய திரைப்படத்தில் மோகன்லால் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆஷிக் உஸ்மான் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சித்திரை திருநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் தலைப்பை மோகன்லால் வெளியிட்டுள்ளார். ‘அதி மனோகரம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் தலைப்பு போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
