கவனத்தை ஈர்க்கும் அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ பட சுவாரஸ்யமான ப்ரோமோஷன் வீடியோ!

தமிழில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக திகழும் அர்ஜுன் தாஸ் நடித்த கடைசி வெளியீடான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நல்ல வரவேற்பையும் கவனத்தையும் பெற்றது. மேலும், தெலுங்கு திரையுலகில் பவன் கல்யாண் உடன் இணைந்து ‘ஓஜி’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதற்கிடையில், அவர் கதாநாயகனாக நடித்த ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தற்போது, பவர்ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக, அர்ஜுன் தாஸ் கதாநாயகனாகவும், அன்னா பென் கதாநாயகியாகவும் நடித்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘கான் சிட்டி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ளார். இசையமைப்பாளராக சான் ரோல்டன் பணியாற்றியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு மற்றும் வடிவுக்கரசி நடித்துள்ளனர். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், படத்தின் புரமோஷனாக அர்ஜுன் தாஸ் மற்றும் சான் ரோல்டன் காரில் பயணம் செய்யும் போது தேர்தல் பறக்கும் படையினரால் நிறுத்தப்பட்டு, அதிக பணத்துடன் சிக்கியதாக காட்டும் ஒரு சுவாரஸ்யமான விளம்பர வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் பணம் எடுத்துச் செல்ல வேண்டாம் என்ற விழிப்புணர்வையும் இணைத்து இந்த புரமோஷன் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading