இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சூரியின் ‘மண்டாடி’… வெளியான ஸ்பெஷல் போஸ்டர்!

நடிகர் சூரி நடிப்பில் உருவாகி வரும் ‘மண்டாடி’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ‘விடுதலை’ மற்றும் ‘மாமன்’ திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம், மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, அதிக பொருட்செலவில் தயாராகி வருகிறது.

தற்போது, இப்படத்தின் முக்கியமான சண்டைக் காட்சிகள் தீவிரமாக படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த திரைப்படத்தை கோடை கால வெளியீடாக திரையரங்குகளுக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் சிறப்பு போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுஹாஸ் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading