பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாகும் கோபிசந்த் நடிக்கும்‘பாரத வர்ஷா: சாகா ஆப் சுலா’ திரைப்படம்!

தெலுங்கு திரையுலகில் முதலில் வில்லன் நடிகராக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து தனக்கென ஒரு தனி இடத்தை நிலைநிறுத்தியவர் நடிகர் கோபிசந்த். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக அவர் ஒரு மிகப்பெரிய வெற்றிப் படத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார். குறிப்பாக, 2024ஆம் ஆண்டு வெளியான அவரது ‘பீமா’ மற்றும் ‘விஸ்வம்’ திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றிய அவருக்கு அளிக்கவில்லை.

இதனுடன், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது புதிய திரைப்பட அறிவிப்புகள் வெளியாகாததும் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில், தற்போது அவர் ‘பாரத வர்ஷா: சாகா ஆப் சுலா’ எனும் புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார். அவரது 33வது திரைப்படமாக உருவாகும் இந்த படம், வரலாற்று பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தை இயக்குநர் சங்கல்ப் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துவருகிறார். தற்போது, இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading