கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா நடிக்கும் ‘காலனி’… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்‌ வெளியீடு!

நயன்தாரா நடித்த ‘அறம்’ திரைப்படத்தை இயக்கி, பெரும் கவனத்தை பெற்றவர் கோபி நயினார். முதல் படமே விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றதால், கோபி நயினார் நம்பிக்கைக்குரிய இயக்குநராகத் திகழ்ந்தார்.

அதேபோல் இயக்குநர் வெற்றி மாறன் தயாரிப்பில், ஆண்ட்ரியா நடித்த ‘மனுஷி’ திரைப்படத்தை கோபி நயினார் இயக்கினார். அரசியல் மற்றும் பெண்ணிய கருத்துக்களை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம், தணிக்கை வாரியத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது சான்றிதழ் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால், இதுவரை வெளியீடு காணாமல் உள்ளது.

இந்நிலையில், கோபி நயினார் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘காலனி’. இந்தப் படத்தில் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், அஞ்சலி நாயர் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘தேனிசைத் தென்றல்’ தேவா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அதிதி மூவிஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றி மாறன் வெளியிட, படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading