தனது வசீகரிக்கும் அழகால் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை கரீனா கபூர்!

பாலிவுட் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாகத் திகழும் கரீனா கபூர், திருமணத்திற்குப் பிறகும் தனது உடல் நலத்தையும் அழகையும் சிறப்பாக பராமரித்து வருகிறார். வயது என்பது ஒரு எண் மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில், அவர் தனது உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது பலருக்கும் முன்மாதிரியாக உள்ளது.

45 வயதிலும் இளமையான தோற்றத்துடன் காணப்படும் கரீனா கபூர், பெண்களுக்கு ஒரு உற்சாகமான முன்னுதாரணமாக இருந்து வருகிறார். அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது, கட்டுப்படுத்தப்பட்ட உணவு பழக்கத்தைப் பின்பற்றுவது, மாலை 6.30 மணிக்குள் இரவு உணவை முடிப்பது, இரவு 9 மணிக்குள் உறங்குவது போன்ற ஒழுங்கான வாழ்க்கை முறையை அவர் கடைப்பிடித்து வருகிறார். இந்த பழக்கவழக்கங்களே அவரை இன்றும் அழகாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.

இளம் நடிகைகளுக்கு போட்டியாக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் கரீனா கபூர், சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு நகைக்கடை தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய சல்வார் அணிந்து, தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டு, விருந்தினர்களுடன் இனிமையாக உரையாடிய அவரது தோற்றம் அனைவரையும் கவர்ந்தது. விழாவில் திரண்டிருந்த புகைப்படக் கலைஞர்களின் கேமரா கண்களுக்கு அவரது அழகிய தோற்றம் ஒரு விருந்தாக அமைந்தது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading