விஜய் மில்டன் இயக்கியுள்ள‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரல்!

‘கோலி சோடா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் விஜய் மில்டன், தற்போது ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் பரத், சுனில், ஆரி அர்ஜுனன், ராப் பாடகர் பால் டப்பா, அம்மு அபிராமி, கிஷோர் டிஎஸ், விஜேதா, பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் மூலம் பாடகர் பால் டப்பா நடிகராக அறிமுகமாகிறார்.

இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன், தனது ‘ரஃப் நோட்’ நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். மேலும், தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் ராஜ் தருண் இப்படத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ‘கோலி சோடா’ தொடரின் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லரை பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ளார். வெளியானவுடன் இந்த டிரெய்லர் இணையத்தில் வேகமாக பரவி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading