தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Seven Screen Studio மற்றும் Rowdy Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
பல தடைகளை எதிர்கொண்டு நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் இறுதியாக நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. காதல் மற்றும் கற்பனை (Fantasy) கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், குறிப்பாக இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.9.93 கோடி வசூலைப் பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.6.85 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்களாக இருப்பதால், இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
