‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் பரத், அதன் பின்னர் ‘காதல்’, ‘எம்டன் மகன்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். ஆனால் அதன் பின்பு வெளியான அவரது சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாததால், அவருக்கான திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன.
இந்நிலையில், சமீபத்தில் அவரது நடிப்பில் ‘காளிதாஸ் 2’ திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதற்கிடையில், ஒரு நிகழ்ச்சியில் பரத் பகிர்ந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் கூறியதாவது: “திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தில் முதலில் நான் தான் நடிக்க இருந்தேன். பின்னர் அந்த கதை நடிகர் தனுஷிடம் சென்றுவிட்டது. அதேபோல் ‘காதல்’ திரைப்படத்தில் முதலில் தனுஷ் தான் நடிக்க இருந்தார். ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சினிமாவில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
