‘ஜனநாயகன்’ திரைப்படத்தை யாரும் பதிவிறக்கம் செய்து பகிரவோ, பார்க்கவோ வேண்டாம்… ‘கேவிஎன்’ நிறுவனம் அறிவுறுத்தல்!

‘ஜனநாயகன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து பகிர்ந்து வரும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், சில மர்ம நபர்கள் திரைப்படத்தை பதிவிறக்கம் செய்து, அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இப்படத்தை பதிவிறக்கம் செய்யும் நபர்கள் மற்றும் அதை பிறருடன் பகிர்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை தங்களது செல்போன்களில் சேமித்து வைத்திருப்பவர்கள் அல்லது பார்ப்பவர்களும் சட்டரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களின் மூலம் இப்படத்தை பகிர்பவர்களை கண்டறிவது எளிதாக இருப்பதால், இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பரவி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை யாரும் பகிரவோ, தங்களது சாதனங்களில் சேமித்து வைக்கவோ கூடாது எனவும், ஏற்கனவே இருந்தால் உடனடியாக அதை நீக்க வேண்டும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading