செல்வராகவன் அவர்களுடன் முதலில் நடிக்க பயந்தேன்… நடிகை ஹேமா டாக்!

நடிகர் விஜய் நடித்த ‘பைரவா’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ஹேமா. அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தற்போது இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் தன் கதாபாத்திரம் குறித்து ஹேமா கூறுகையில், “இந்த திரைப்படத்தில் நான் கதாநாயகியின் அண்ணி வேடத்தில் நடித்துள்ளேன். ஆனால் அந்த வேடம் சிறியதாக இல்லாமல், பல முக்கியமான காட்சிகளில் இடம்பெறும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, செல்வராகவன் மற்றும் கவுசல்யா இணைந்து வரும் ஒரு பாடல் காட்சியில் நானும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளேன்.செல்வராகவனுடன் இணைந்து நடித்த முதல் காட்சியின் போது நான் மிகுந்த பதட்டத்தால் நடுங்கியபடி இருந்தேன். அதன் காரணமாக நான் மனப்பாடம் செய்திருந்த வசனங்களையே மறந்துவிட்டேன். இதனால் அந்தக் காட்சியை இயக்குநர் மீண்டும் மீண்டும் எடுத்து படமாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

என் பயத்தை கவனித்த செல்வராகவன் என்னிடம் மிகவும் அமைதியாகவும் ஊக்கமளிக்கும் வகையிலும் பேசியார். ‘நடிப்பின் போது யாரையும் நினைத்து பதட்டப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஒரு கதாபாத்திரம் போலவே, நானும் ஒரு கதாபாத்திரம் தான். எனவே என்னை ஒரு நடிகராக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாகவே பாருங்கள்’ என்று கூறி என் பதட்டத்தை குறைத்தார்.இதற்குப் பிறகு, சமுத்திரக்கனி நடிக்கும் மற்றொரு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். மேலும், சினிமாவில் ரித்திகா சிங் போன்ற ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading