நயன்தாரா எனக்கு பக்கபலமாக இருந்தார்… LIK நிகழ்ச்சியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் எமோஷனல் டாக்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘எல்ஐகே’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த முக்கிய நடிகைகள் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள கீர்த்தி ஷெட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கவுரி கிஷனும் வந்திருந்தார். இதற்கிடையில், முன்னாள் நடிகையான மாளவிகா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் மனைவியும் முன்னணி நடிகையுமான நயன்தாராவும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். எனினும், நயன்தாரா மேடையில் உரையாற்றவில்லை.

நிகழ்ச்சியில் பேசிய விக்னேஷ் சிவன், நயன்தாரா தன்னை எப்படி ஆதரித்தார் என்பதை உணர்ச்சியுடன் பகிர்ந்தார். “இந்த விழா ஏற்பாடுகளில் அவர் சில நாட்களாக ஈடுபட்டார். நான் நினைத்தபடி படம் உருவாகாத சூழலில் கூட அவர் எனக்கு துணையாக இருந்தார். மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக பெற்றிருந்த முன்பணத்தை இந்தப் படத்திற்காக பயன்படுத்தியதை பின்னர் தான் அறிந்தேன்” என்று தெரிவித்தார்.

மேலும், கவுரி கிஷன் பேசுகையில், “இந்தப் படத்தை நயன்தாரா தயாரித்துள்ளார் என்பதை கேட்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களை மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டார்கள்” என்று கூறினார். நடிகை மாளவிகாவும் படத்தின் மீது நம்பிக்கை தெரிவித்தார். கீர்த்தி ஷெட்டி பேசுகையில், “இந்தப் படத்தில் பல முன்னணி கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக இது இருக்கும். அனிருத் இசை ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading