ராமர் வேடத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் ஏஐ படம் பரவிய நிலையில், அவரது சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.அவர் கூறியதாவது:”ராமர் என்பவர் வெறும் ஒரு கதாபாத்திரம் இல்லை… நபரும் இல்லை… நேர்மை, தர்மம் என நாம் மதிக்கும் மதிப்புகளின் அடையாளம். சுஷாந்த் தெய்வீகமாகவும் கம்பீரமாகவும் தோற்றமளிப்பதோடு, ராமர் கொண்டிருக்கும் மனவலிமையையும் வெளிப்படுத்துகிறார். கண்களில் உள்ள பிரகாசமும், முகத்தில் உள்ள கம்பீரமும், சுஷாந்தைப் போல வேறு யாராலும் ராமராக நடிக்க முடியாது என்பதை காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
Add a Comment
