தெலுங்கில் வரலட்சுமி சரத்குமார் இயக்கி தயாரித்து கதையின் நாயகியாக நடித்து கடந்த மார்ச் 6ம் தேதி திரைக்கு வந்த படம் ‘எஸ்.சரஸ்வதி’. க்ரைம் திரில்லர் கதையில் உருவான இந்த படத்தில் அவருடன் பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். ஆனால், இந்த படம் தியேட்டரில் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.இந்த நிலையில், ஏப்ரல் மூன்றாம் தேதி இந்த எஸ்.சரஸ்வதி படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட்டார்கள். அதையடுத்து இந்தியா முழுவதும் இந்த படம் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தாத இந்த படம் இல்லத்தரசிகளின் சிறப்பான வரவேற்பை பெற்று இருக்கிறது.
Add a Comment
