தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் சிம்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். வடசென்னை பகுதியை பின்னணியாகக் கொண்டு கேங்க்ஸ்டர் தளத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து அமீர், ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், சைத்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது அதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே மாத இறுதிக்குள் அல்லது ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் முழுப் படப்பிடிப்பையும் நிறைவு செய்யும் வகையில் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ‘அரசன்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் என சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. தற்போது இந்த படத்தில் கென் கருணாஸ் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘யூத்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக இயக்குனராக ஜொலித்த கென் கருணாஸ், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற மேலும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
