சூர்யாவுடன் ‘கருப்பு’ படத்தின் புதிய பாடல் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர்!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட பின்னரும், படக்குழு அறிவித்தபடி, ‘கருப்பு’ படம் வருகிற மே மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ள இப்படத்தில், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில், ‘கருப்பு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாங்க நாலு பேரு’ பாடல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாடல் அமைப்பாளர் சாய் அபயங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். இதில், பாடலாசிரியர் மற்றும் பாடகர் பால் டப்பா உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியும் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், ‘கருப்பு’ படத்தின் அடுத்த பாடலும் பால் டப்பா எழுதி பாடியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading