‘மனிதன் தெய்வமாகலாம்’ படக்குழுவினரிடம் இருந்து இப்படியும் படம் எடுக்கலாம் என்பதை கற்றுக்கொண்டேன் – இயக்குனர் செல்வராகவன்!

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜயா சதீஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். மேலும், குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா மற்றும் என். ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், ‘தங்க ரத்தினமே’ மற்றும் ‘கலங்காதே ராசாவே’ போன்ற பாடல்கள் வெளியானதும் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஏ.கே. பிரியன் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய செல்வராகவன், “இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்கள் எப்போது ஓய்வெடுக்கிறார்கள் என்பதே தெரியாத அளவிற்கு கடுமையாக உழைத்தனர். அவர்களிடமிருந்து நான் இப்படியும் படம் எடுக்கலாம் என்பது போல் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். ஒரு காலத்தில் நடிகை கௌசல்யாவை பார்த்து ரசிகராக இருந்த நான், இன்று அவருடன் ஒரே மேடையில் அமர்ந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவை ரவி வர்மா மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை தீபக் எஸ் கவனித்துள்ளார். கலை இயக்கத்தை பாக்கியராஜ் வெள்ளையன் செய்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading